உயிருடன் இருப்பவரை பாடையில் கட்டி விநோத வழிபாடு.. ஆச்சரியமூட்டும் பின்னணி!!

519

சேலத்தில்..

உயிருடன் இருக்கும் நபருக்கு பாடை கட்டி அவரை ஆயிரக்கணக்கான மக்கள் இடுகாட்டிற்கு எடுத்துச் சென்று இறுதிச் சடங்கு நடத்திய விநோத சம்பவம் ஒன்று தமிழகத்தின் சேலத்தில் இடம்பெற்றுள்ளது.



சேலம் மாவட்டம் கொண்டாலம்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற பலப்பட்டறை மாரியம்,காளியம்மன் கோவிலில் கிராம மக்கள் உடல் நலத்துடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என வேண்டி திருவிழா நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அங்கு ஒருவர் இறந்த உடன் பாடை கட்டி இடுகாட்டு வரைக்கும் கொண்டு சென்று இறுதி சடங்கு நடத்தும் முறை அனைத்தும் விழாகவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சேலம்- சந்தைப்பேட்டையைச் சேர்ந்த ஜெயம் மணி என்பவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குணம் அடைந்தால் உயிரோடு இருக்கும் போதே இறுதிச் சடங்கு செய்து நேர்த்திக் கடன் செலுத்துவதாக வேண்டியுள்ளார்.

அதன்படி அவர் குணமடைந்ததால் 7வது ஆண்டாக சவ வேடிக்கை நேர்த்திக்கடன் செலுத்தினார். பிணமாக வேடம் அணிந்த ஜெயமணிக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள்,கிராம மக்கள் சடங்குகளை செய்து பெண்கள் ஒப்பாரி வைக்க உறவினர்கள் பாடை கட்டி நடனமாடி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

திருமணம் நடக்க, குழந்தை பேறு கிடைக்க கோவிலில் வழிபாடு நடத்திய உடன் பட்டாசு வெடித்தவாறு வீதி வீதியாக இறுதி ஊர்வலமாக இடுகாட்டிற்கு சென்று அங்கு கோழிகளை பலியிட்டு புதைத்துவிட்டு வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.

மக்கள் நலமுடன் இருப்பதற்காகவும், நோய்கள் குணமடையவும், திருமணம் நடக்க, குழந்தை பேறு கிடைக்க, குடும்ப சண்டைகள் நீங்க அம்மனை வேண்டி கொண்டு இந்த விநோத திருவிழா நடத்தப்படுகின்றதாம்.