கண் கலங்கிய மகள்… 78 கிலோ எடையை குறைத்து அசத்திய தந்தை!!

474

கனடாவில்..

கனடாவை சேர்ந்த தந்தை ஒருவர் தன்னுடைய மகளுடன் பேசிய பிறகு சுமார் 78 கிலோ உடல் எடையை குறைத்து அசத்தியுள்ளார். பொதுவாகவே பெரும்பாலான மக்கள் தங்கள் உடல் எடையை குறைக்க மிகுந்த போராட்டம் நடத்துகின்றனர்.



பலருக்கு அதற்கான உத்வேகமும் இருந்தும், சரியான மன ஊக்கம் மற்றும் அதனை தொடர்வதற்கான காரணமும் கிடைக்காமல் போய் விடுகிறது. இதனால் உடல் எடையை குறைக்கும் எண்ணம் கடைசி வரை பலருக்கு கனவாகவே போய்விடுகிறது.

ஆனால் கனடாவை சேர்ந்த தந்தை ஒருவர், தன்னுடைய மகளுடன் பேசிய பிறகு, தன்னுடைய விடாமுயற்சியால் 78 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். தன்னுடைய உடல் எடை குறைப்பு பயணம் குறித்து கனேடிய தந்தை ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், “ஐந்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய மகள் 4 வயது சிறுமியாக இருந்தாள், அப்போது விளையாட்டு மைதானத்தில் இருந்து வீடு வரை இருவரும் ஓட்டப் பந்தயம் வைத்து கொள்வோமா என்று கேட்டாள்,

“அந்த நேரத்தில் நான் 181 கிலோ எடை இருந்தேன், எனவே என்னை மன்னித்து விடு, தந்தையால் ஓட முடியாது என்று உனக்கு தெரியும் அல்லவா” என்று கூறினேன். அப்போது சோகத்தில் வாடிய எனது மகளின் முகம், எனக்குள் இதுவரை இல்லாத ஒரு தீயை எரிய வைத்தது.

அந்த ஒரு தருணத்தினாலேயே தற்போது 78 கிலோ உடல் எடையை குறைத்து இருக்கிறேன். இப்போது நாங்கள் அனைத்து நேரங்களிலும் ஓட்டப்பந்தயம் வைத்து கொள்கிறோம், ஒன்றாக விளையாட்டு மையத்திற்கு செல்கிறோம், ஜும் செல்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதில் மகள் தந்தை இருவரும் விளையாட்டு மைதானத்தில் ஒன்றாக நேரம் செலவழிக்கும் தருணங்கள் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது 3.9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரல் ஆகி வருகிறது.