புலமைப் பரிசில் மாணவர்கள் கௌரவிப்பு..
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 2022 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி 98% சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது.
பாடசாலையின் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வு கடந்த 06.04.2022 ( வியாழக்கிழமை) காலை 9.00 மணிக்கு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலய மண்டபத்தில் விழா ஏற்பாட்டு குழுவின் தலைவர் ந.ஜனகதீபன் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியாப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரன் அவர்களும் முதன்மை விருந்தினராக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் முதல்வர் ஆ.லோகேஸ்வரன் அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக கோட்டக்கல்வி பணிப்பாளர் ந.ச.செல்வரத்தினம், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினரும் வவுனியா தொழில்நுட்ப கல்லூரியின் விரிவுரையாளருமான ச.கிருஸ்ணகுமார், வவுனியா தெற்கு வலய ஆரம்பப் பிரிவு ஆசிரிய ஆலோசகர் செ.வியகாந்த்தன் அவர்களும்,
கௌரவ விருந்தினர்களாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பிரதி அதிபர்களான கு.முல்லைக்குமரன், த.சிறிகாந்தன், வை.விஜேந்திரன், திருமதி. ச.இரவீந்தின் ஆகியோரும் உதவி அதிபர்களான திருமதி.யோ.சிறிரங்கநாதன், தா.உதயராஜன் ஆகியோரும்,
ஆரம்ப பிரிவு ஆசிரியர்கள், மக்கள் வங்கியின் பிரதிநிதி, பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வெற்றிக் கிண்ணம், பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.