உலகின் அதிக எடைகொண்ட மனிதர் பரிதாப மரணம்!!

338

உலகின் முன்னாள் உடல் பருமானான நபர் தனது 48 வயதில் மரணம் அடைந்துள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டில் உலகின் உடல்பருமான நபர் என கின்னஸ் புத்தகத்தில் மெக்சிக்கோவை சேர்ந்த மானுவேல் உரிபே என்ற நபர் இடம் பெற்றிருந்தார்.

இதனையடுத்து தனது இடையை குறைக்க வேண்டும் என்று எண்ணிய மானுவேல் கடும் உடற்பயிற்சியும், உணவு கட்டுப்பாட்டையும் பின்பற்றி வந்துள்ளார்.

இதனால் அவரின் மொத்த எடையான 1230 பவுண்டுகள், சுமார் 363 பவுண்டுகள் குறைந்து 867 பவுண்டுகளாக மாறியது.

இந்நிலையில் கடந்த 2ம் திகதி வழக்கத்திற்கு மாறாக இவரது இதயத்துடிப்பு அதிகரித்துள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்துள்ளனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி இவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

F1 F2 F3