ஆற்றுக்குள் நடந்து செல்லும் அதிசய பெண்.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!!

670

ஜபல்பூரில்..

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நர்மதா ஆற்றில் வயதான பெண் நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நர்மதா ஆற்றில் தண்ணீரில் மேல் மூதாட்டி நடந்து சென்ற நிலையில் இதை அதிசயம் என்று நம்பி அந்த மூதாட்டியை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் ஆற்றங்கரையில் திரண்டனர்.



அந்த மூதாட்டி தான் நர்மதா தேவி என மக்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டனர் . இந்த வீடியோ சுற்றியுள்ள கிராமங்களில் பரவியதால் நர்மதா தேவி என நினைத்து அந்த மூதாட்டியை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதியது.

நர்மதா தேவியின் தரிசனம் கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் மூதாட்டியின் வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கானோர் காத்திருந்து தரிசித்தனர். மத்திய பிரதேசத்தில் ஆற்று தண்ணீர் மேல் நடக்கும் பெண் தெய்வம் என இவரை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் ஜோதி ரகுவன்ஷி. இவர் தண்ணீரில் நடப்பதையோ அல்லது எந்த ஒரு தெய்வத்தின் அவதாரமாக இருப்பதையோ அவர் மறுத்துள்ளார்.

கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அவர், நர்மதாபுரத்தில் வசிப்பதாக தெரிவித்துள்ளார். ஜோதி ரகுவன்ஷி, நர்மதா நதியைச் சுற்றி நடப்பதன் மூலம் அவர் ஒரு அதிசய பெண் என நம்பி அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு,

தரிசனத்திற்காக காத்துக் கிடக்கின்றனர். போலீசார் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்து வருகின்றனர்.