எலான் மஸ்கின் அதிரடி அறிவிப்பு – குழப்பத்தில் டுவிட்டர் பயனர்கள்!!

497


டுவிட்டர்..சமூக வலைத்தளமான டுவிட்டரை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது வலி நிறைந்தாக உள்ளதென அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டுவிட்டரை செயற்படுத்துவது ரோலர் கோஸ்டரை போன்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.இன்றைய தினம் பிபிசி செய்தி சேவைக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சரியான நபர் வந்தால் டுவிட்டர் நிறுவனத்தை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கார் தயாரிப்பாளரான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் என்ற ரொக்கெட் நிறுவனத்தையும் நடத்தி வரும் மஸ்க், ஒக்டோபரில் 44 பில்லியன் டொலர்களுக்கு டுவிட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்திருந்தார்.


ஆனால் ஒரு நீதிபதி டுவிட்டர் நிறுவனத்தை கொள்வனவு செய்யுமாறு தன்னை வற்புறுத்தியதால் தான் அதன் உரிமைகளை பெற்றுக் கொண்டதாக எலோன் மஸ்க் ஒப்புக் கொண்டுள்ளார்.