காணமல்போன மாணவர்களின் சடலங்கள் மீட்பு!!

845

மாணவர்களின் சடலங்கள்..

நீராடச் சென்று காணாமல் போன இரு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலாங்கொடை வளவை கங்கை வெலிஹரனாவ நீர் இறைக்கும் நிலையத்திற்கு அருகில் நான்கு மாணவர்கள் நீராடச்சென்ற மாணவர்களில் இருவர் காணாமல் போயிருந்தனர்.



இந்நிலையில் இன்று (12.04.2023) மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். 17 வயதுடைய மாணவனும் மற்றும் 15 வயதுடைய மாணவனும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

பலாங்கொடை தேசிய பாடசாலை மற்றும் பலாங்கொடை CC தமிழ் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் நேற்று நீராட சென்றிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.