குமரியில்..
கேரள மாநிலத்தின் ஆலப்புழாவை சேர்ந்தவர் ரதீஸ். இவர் தனது மனைவி, 2 பெண் பிள்ளைகள் உள்பட குடும்பத்தினருடன் ஒரு வேனில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளார். இவர்கள் கன்னியாகுமரியில் காவல் நிலையம், தபால் அலுவலகம் இடையேயுள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இந்த இடத்தில் பார்கள் அதிகமாக உள்ளன. இதைப் பார்த்த ரதீஸிற்கு குடிக்க ஆசை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவியிடம் மது குடிக்க பணம் தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
அவர் பணம் கொடுக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டார். டூர் வந்த இடத்தில் குடிபோதையில் தகராறு செய்தால் தப்பாகிவிடும் என காரணம் கூறி மனைவி மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ரதீஸ் காலை விடுதி கட்டடத்தில் இருந்து கீழே குதித்து விடுவேன் என மிரட்டினார். இதனால் அவருடன் சுற்றுலா சென்ற குடும்பத்தினர் மட்டுமின்றி அந்த விடுதியில் தங்கியிருந்த அனைவரும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
இதை அங்கிருந்தவர்கள் பார்த்து தீயணைப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். கீழே இறங்கிவருமாறு குடும்பத்தினர் கெஞ்சினர். தீயணைப்பு வீரர்கள் ரதீஸிடம் சமாதானம் செய்த நிலையில், ஒரு கட்டத்தில் ரதீஸ் கீழே குதித்தார். எனினும் தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக மீட்டனர்.
அவருக்கு உடலில் சில காயங்கள் ஏற்பட்டன. பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதற்கு பேசாமல் ரதீஸ் மது குடிக்க அனுமதித்திருக்கலாம் என குடும்பத்தினர் புலம்பினர்.
இதனிடையே, ரதீஸ் மீது தற்கொலைக்கு முயற்சித்தல் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணி ஒருவர் கட்டடத்தில் இருந்து கீழே குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.