நடிகரும் இயக்குனருமான பார்த்திபனின் ஒரு கோடி ரூபாய் சவால்!!

464

R

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வருகின்றார். இந்தப் படத்தில் கதை என்று எதுவும் கிடையாது என்று கூறியுள்ள அவர் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான சவால் ஒன்றையும் அளித்துள்ளார்.

இந்தப் படத்தின் முதல் பாதியை மட்டும் பார்த்துவிட்டு அடுத்த பாதியில் என்ன நடக்கும் என்று சரியாகக் கூறுபவருக்கு தான் ஒரு கோடி ரூபாய் பரிசளிக்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முதல் பாதியில் தான் வெளியிடும் தகவலைக் கொண்டே படத்தின் பிற்பாதியை யூகிக்க முடியும் என்ற பார்த்திபன் முதல் பாதியில் தான் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் கூறுகின்றார்.

கதையில்லாமல் இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்திழுக்குமா என்ற கேள்விக்கு அவர் நம்பிக்கையுடன் பதில் அளிக்கின்றார். ஆரம்பம் முதல் இந்தப் படம் பார்ப்பவர்களுக்கு மிகவும் சுவாரஸ்யத்தைத் தரும் என்பது அவரது கணிப்பாகும்.

இந்தப் படத்தில் வரும் நான்கு பாடல்களை தமன், விஜய் ஆண்டனி, அல்போன்ஸ் ஜோசப், சத்யா மற்றும் சரத் இசையமைத்துள்ளனர். ஆறு புதுமுகங்களும், ஆறு பிரபலங்களும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தின் கதை பற்றிய வியப்பு திரைத்துறை வட்டாரங்களிலேயே உலவுகின்றது.