போதையில் பெற்ற மகள்களுக்கு தீ வைத்த நபர் எடுத்த விபரீத முடிவு!!

505

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி ராஜகோபால் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதியருக்கு 11-வயது மற்றும் 9-வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.



எலக்ட்ரிசன் வேலை பார்த்து வரும் நாகராஜன் குடி போதைக்கு அடிமையானதால் குடும்ப வறுமையாலும் இரு குழந்தைகளையும் படிக்க வைக்கவும், குடும்ப தேவைக்காகவும் மனைவி அனிதா அருகில் உள்ள பேக்கரி கடையில் வேலைக்கு சென்று வருகிறார்.

பேக்கரி கடையில் வேலை பார்க்கும் அனிதா நேற்றிரவு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு கடையில் போளி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் வீட்டிற்கு வர தாமதமாகியுள்ளது.

இந்த நிலையில் நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாகராஜன் மனைவி வீட்டில் இல்லாத நிலையில் தனது இரு குழந்தைகளும் கட்டிலுக்கு அடியில் தூங்கி கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

குடிபோதையில் இருந்த நாகராஜன் மனைவி வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் வீட்டை பூட்டி விட்டு கட்டிலுக்கு அடியில் தூங்கி கொண்டிருந்த தனது இரு குழந்தைகள் மீதும் பீரோவில் இருந்த புடவை மற்றும் ஆடைகளை குழந்தைகள் மீது தூக்கி போட்டு தீ வைத்து கொளுத்தியுள்ளார். மேலும் தானும் உடலில் மண்னெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவுகள் பூட்டப்பட்டிருந்ததைத் தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது நாகராஜன் உடல் முழுவதும் கருகி உயிரிழந்த நிலையிலும், இரு குழந்தைகளும் உடல் கருகி உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளனர்.

இதனையடுத்து உடனடியாக இரு குழந்தைகளையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தைகளை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இரு குழந்தைகளும் 80-சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.