உக்ரைனில் இராணுவம் நடத்திய குண்டு வீச்சில் 100 பேர் பலி!!

977

Ukraine

விமான நிலையத்தை கைப்பற்ற உக்ரைனில் இராணுவம் நடத்திய குண்டு வீச்சில் 100 பேர் பலியாகினர். உக்ரைனின் கிழக்கு பகுதியில் பெருமளவில் இருக்கும் ரஷிய ஆதரவாளர்கள் இங்கும் தன்னாட்சி உரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியாக படை அமைத்து இராணுவத்துடன் போரிட்டு வருகின்றனர்.

இந்நாட்டின் 2வது மிகப்பெரிய டன்ட்ஸ்க் விமான நிலையத்தை கைப்பற்றி தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். இந்த நிலையில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோ போரோ சென்கோ போராட்டக்காரர்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்.

இதனால் போர் விமானங்கள், ஹெலிகப்டர்கள் டன்ட்ஸ்க் விமான நிலையத்தில் பதுங்கியிருக்கும் போராட்டக்காரர்கள் மீது குண்டுகளை வீசி தாக்கியது. ரொக்கெட்டுகள் மற்றும் கையெறி குண்டுகளும் வீசப்பட்டன.

போராட்டக்காரர்களின் மறைவிட பகுதிகளில் 500 பராசூட் வீரர்கள் தரை இறக்கப்பட்டனர். அவர்கள் ரஷ்ய ஆதரவாளர்களுடன் போரிட்டு தாக்குதல் நடத்தினர்.

அதில் போராட்டக்காரர்கள் மற்றும் பொது மக்கள் என 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த தகவலை டன்ட்ஸ்க் பிரதமர் அலெக்சாண்டர் போரோடல் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இராணுவ தரப்பில் சேதம் எதுவும் இல்லை.