வேலைக்கு போகாத மகனை கண்டித்த தந்தை… விரக்தியில் சென்ற மகன்… அடுத்தடுத்து பறிபோன உயிர்கள்!!

642

கரூரில்..

கரூர் மாவட்டம், தரகம்பட்டி அடுத்த சுண்டுகுளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (46). இவரது மகன் செல்வராஜ் (23). இவர் வேலை எதுவும் இல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.



எல்லா நேரமும் மொபைல் போன் பயன்படுத்தி வந்ததால் கோவிந்தராஜ் அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த செல்வராஜ் அந்தப் பகுதியில் உள்ள தோட்டத்தில் வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

மகன் செல்வராஜ் இறந்த தகவல் அறிந்த, அவரது தாய் சுமதி( 43) மன வேதனையால் விஷ விதையை குடித்ததாக கூறப்படுகிறது. மயங்கி விழுந்த அவரை மைலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக சுமதியை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்தபோது பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து கோவிந்தராஜ் சிந்தாமணிபட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை செய்துகொண்ட தாய், மகன் ஆகிய இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.