ஈக்வடாரில்..
ஈக்வடார் நாட்டில் நதிக்கரையிலிருந்து துர்நாற்றம் வீசுவதையும், ஒரு குறிப்பிட்ட இடத்தை நாய்கள் மோப்பம் பிடித்தபடி சுற்றி வருவதையும் கண்ட அப்பகுதி மீனவர்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
பொலிசார் அந்த இடத்தைத் தோண்டச் செய்தபோது கண்ட காட்சி அப்பகுதியில் நின்றவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மூன்று அழகிய இளம்பெண்கள், வாய்களில் துணி அடைக்கப்பட்டு,
கழுத்தறுபட்டு, கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், ஆழமற்ற மண்ணில் புதைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது.
மொடலாகிய Nayeli (22), மாணவிகளாகிய Yuliana (21) மற்றும் Denisse (19) ஆகிய அந்த மூன்று இளம்பெண்களும் கடற்கரைக்குச் செல்வதாக தத்தம் வீடுகளில் கூறிச்சென்ற நிலையில் வீடு திரும்பாததால் அவர்களுடைய பெற்றோர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.
பொலிசார் அவர்களைத் தேடிவந்த நிலையில், மூன்று நாட்களுக்குப் பிறக், மணலில் புதைக்கப்பட்டிருந்த அவர்களுடைய உடல்கள் கிடைத்துள்ளன. அவர்கள் புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு மொபைலும்,
அவர்கள் பயணம் செய்த வாடகை வாகனமும் கிடைத்துள்ளதால், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அவை பெரிதும் உதவக்கூடும் என பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.