முகம் வீங்கிய நிலையில் பார்க்கவே பரிதாபமாக மாறிய நடிகை : சிகிச்சையிலும் மக்களுக்கு கொடுத்த எச்சரிக்கை!!

835

மாளவிகா அவினாஷ்..

நடிகை மாளவிகா அவினாஷ் அண்மையில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சைக் பெற்றுக்கொண்ட போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு தனக்கு ஏற்பட்டதை விபரமாக கூறியிருக்கிறார்.

தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ஜேஜே திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து ஆதி, பைரவா, கைதி மாஸ் ஹிட் கொடுத்த கே.ஜி.எப் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம், மலையாளம் என பழ மொழித்திரைப்படங்களிலும் நடித்து பிரபலமாகியிருக்கிறார். வெள்ளித்திரையில் மட்டுமல்ல சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்.

அண்ணி, சிதம்பர ரகசியம் ராஜராஜேஸ்வரி, அரசி போன்ற சீரியல்களிலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமாகியிருக்கிறார். நடிப்பில் மட்டுமல்ல அரசியலிலும் இணைந்து மக்களுக்கு சிறந்த தொண்டாற்றி வருகிறார்.

இந்நிலையில் இவர் ஒற்றைத் தலைவலியால் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது மக்களுக்கு எச்சரித்து அறிவுரை ஒன்றையும் கூறியிருக்கிறார்.

ஒற்றைத் தலைவலி என்பது இப்போது மக்களிடையே ஏற்படும் மிக மோசமான தலைவலிகளில் ஒன்றாகும். நீரிழப்பு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிகரிக்கும் மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம்.

ஒற்றைத் தலைவலி அதிகரிக்கும் போது, குமட்டல், தலைச்சுற்றல், எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும். இது வழக்கமான தலைவலியைக் காட்டிலும் அதிக வலியை ஏற்படுத்தும். நம்மை பலவீனமாகவும் சோர்வாகவும் உணர வைக்கும். கடுமையான வலி, குமட்டல், வாந்தி, அசௌகரியம் ஆகியவை இதன் அறிகுறியாகும்.

ஒற்றைத் தலைவலி என்பது உலகளவில் 148 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கும் ஒரு பொதுவான பாதிப்பாகும். பொதுவாக ஆண்களை விடப் பெண்களுக்கு இந்த ஒற்றைத் தலைவலி ஏற்படும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த ஒற்றைதலைவலியால் தான் பாடாத பாடுவதாகவும் இது தொடர்பில் எப்போது எச்சரிக்கையாக இருக்கும் படியும் மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.