காலியில்..
காலி – நெலுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலவத்த, பாமன்கட பிரதேசத்தில் நேற்று பிற்பகல் முதல் காணாமல் போயிருந்த இரண்டரை வயது குழந்தையின் சடலம் சற்று முன்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தை இருந்த வீட்டுக்கு அருகில் ஓடும் கால்வாயில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மதியம் முதல், காணாமல் போன குழந்தையை தேடும் பணியில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் உள்ளூர்வாசிகள் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் வீட்டின் அருகில் உள்ள ஓடையில் இருந்து குழந்தையின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். புத்தாண்டுக்காக பெற்றோருடன், நெலுவ பிரதேசத்தில் உள்ள தனது பாட்டியின் வீட்டிற்கு வந்த இரண்டரை வயது குழந்தை நேற்று முதல்(15/04/2023) காணாமல் போயுள்ளதாக நெலுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர் கெகுலுந்தல லியனகே, டொன் நிவேன் தேவ்மிர என பொலிஸார் தெரிவித்தனர். இந்த குழந்தை புத்தாண்டுக்காக அளுத்கம, தர்காநகரை சேர்ந்த தனது பெற்றோருடன் தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளது.
தனது மனைவி வீட்டில் இருந்த குழந்தை காணாமல் போனதாக குழந்தையின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நெலுவ கினியாவல வீதியில் குழந்தை நடந்து சென்றதாக வீதியில் பயணித்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போன குழந்தை தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க நெலுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.