தினசரி நடப்பதை 2 மணி நேரத்திற்கு மேல் நினைவில் வைத்து கொள்ள முடியாத பெண் : பரிதாப பின்னணி!!

472

அமெரிக்காவில்..

கடந்த 4 ஆண்டுகளாக தினமும் வாழ்வில் நடக்கும் செயல்களை 2 மணிநேரத்திற்குள் மறந்துவிடுகின்றாராம் ஒரு இளம் பெண். அமெரிக்காவை சேர்ந்த ரிலே ஹார்னர் என்ற மாணவி கல்லூரியில் கல்வி பயின்று வரும் இளம் வயதினர்.



இவரது வயது 16. இவர் நடனம் ஆடுவதில் சிறப்பு பெற்றவர். அந்த மாணவி நடனம் ஆடிக் கொண்டிருந்த வேளையில் தனது சமநிலையை இழந்த ஒரு நபர் இந்த மாணவி மீது தவறுதலாக விழுந்ததால் இவர் மயக்கம் அடைந்துள்ளார்.

பின் ரிலேயின் தாயார் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். சிகிச்சை பெற்று வீடு திரும்பும் வேளையில் 30 தொடக்கம் 40 வரையான எண்ணிக்கையில் அந்த மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது.

மறுநாள் காலையில் நேற்று நடந்த சம்பவம் ஒன்றும் நினைவில் இல்லாமல், அனைத்தையும் மறந்துள்ளார். அன்றைய நாள் ஜூன் 11. அந்த திகதியில் இவர் நடனம் ஆட வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதே போலவே விடியும் ஒவ்வொரு நாளையும் இரண்டு மணி நேரத்திற்கு நினைவுப்படுத்திக் கொள்கின்றார்.

ஆகவே தனக்கு விபத்தில் தான் இவ்வாறு நடந்துள்ளது என்று நினைவுப்படுத்திக் கொள்வார். ஆனால் மீண்டும் இரண்டு மணிநேரத்திற்குள் அதை மறந்து, ஜூன் 11ம் திகதிக்கே வந்துவிடுவாராம்.

அந்த மாணவிக்கு, விசித்திரமான மூளை நோய் ஏற்பட்டுள்ளது. ஆகவே மூளையதிர்ச்சி சிகிச்சை பெற்று வருகின்றார். இவரது டிபிஐ (TBI)இன்னும் முழுமையாக மாற்றப்படவில்லை. ஆகவே அவரது நினைவுகள் தற்போது இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும்.

இவர் மருந்து எடுத்துக் கொண்டு வருவது தான் சிறந்த ஒன்றாக கூறிகின்றனர். எவ்வாறு இருப்பினும் இவர் மீண்டும் பழைய நிலைமைக்கு வரமாட்டார் எனவும் கூறிகின்றனர். இவ்வாறு பலர் பலவற்றை கூறினாலும் ரிலேயின் குடும்பத்தினர் அவருக்கு ஊக்கமளித்து அவருக்கு உதவியளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.