தஞ்சாவூரில்..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் தெற்கு வீதியில் விக்னேஷ் –(20) தம்பதியினர் வசித்து வந்தனர். விக்னேஷ் சரக்கு ஆட்டோ டிரைவர். பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்த துர்கா பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி தான் காதலித்த விக்னேஷை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
அப்போது மகளை காணவில்லை என துர்காவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில் துர்கா – விக்னேஷ் காதல் ஜோடினர் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் துர்காவின் பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
அதன்பின்னர் திருபுவனத்தில் தனது கணவருடன் குடும்பம் நடத்தி வந்த துர்கா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதற்கிடையே கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த துர்கா தூக்கு போட்டு தொடங்கியுள்ளார். வீட்டில் சத்தம்கேட்டு நச்தேகம் அடைந்த உறவினர்கள் சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக துர்காவை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் துர்கா பரிதாபமாக இறந்துள்ளார்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருமணமாகி ஒரு ஆண்டே ஆவதால் கும்பகோணம் ஆர்.டி.ஓ. மேல்விசாரணை நடத்தி வருகிறார்.