வவுனியா உட்பட 7 மாவட்டங்களில் கடும் வெப்பமான காலநிலை : மக்களுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கை!!

1738

வெப்பமான காலநிலை..

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருணாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.



இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும், குறித்த மாவட்டங்களில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகறிது.

எனவே மக்கள் வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.