சிறுவர், சிறுமிகளுக்கு நாய்களுடன் திருமணம் நடத்தி வைக்கும் வினோத கிராமம்!!

655

இந்தியாவில்..

இன்றைக்கும் தொடருது மூட நம்பிக்கை. இந்தியாவில், ஒடிசா மாநிலத்தில் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் நாய்களுடன் திருமணம் செய்து வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

இப்படி நாய்களுக்கு சிறுவர், சிறுமிகளைத் திருமணம் செய்து வைப்பதால் அவர்களிடமிருந்து தீய சக்திகள் விலகி, அந்த தீய சக்திகள் நாய்களுக்கு சென்று விடும் என்று அந்த கிராம மக்கள் இன்றளவிலும் தீவிரமாக நம்புகின்றனர்.

இந்த சடங்குகளைத் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். ஒடிசா மாநிலத்தில் பாலசோர் மாவட்டத்தில் சோரா என்கிற பகுதியில் பந்த்சாகி பழங்குடியின கிராமம் உள்ளது.

இந்த கிராம மக்கள், தங்கள் கிராமத்தில் இருக்கும் சிறுமிகளுக்கும், சிறுவர்களுக்கும் நாய்களுடன் திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.

அப்படி, நேற்று கிராமத்தில் உள்ள 11 வயது சிறுவனுக்கும் பெண் நாய்க்கும் திருமணம் நடத்தி வைத்துள்ளார்கள். அதே போன்று 7 வயது சிறுமிக்கும் ஆண் நாய்க்கும் சீர் வரிசையுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அந்த கிராமத்தில் வளர்கிற குழந்தைகளின் மேல் தாடையில் முதல் பற்கள் வளர்ந்த பின்னர், இந்த திருமண சடங்குகள் ஏற்பாடு செய்யப்படுகிறது.