தலைக்கேறிய ஆணவம்.. தம்பி என்றும் பார்க்காமல் கங்கை அமரனை அடித்து விரட்டிவிட்ட இளையராஜா!!

877

சினிமாவில்..

தமிழ் சினிமாவில் இன்று வரை இசையின் சாம்ராஜ்யமாக, தன் இசையால் அனைவரையும் சுண்டி இழுத்து வருபவர் இசைஞானி இளையராஜா. உச்சத்தில் இளையராஜ இருந்தாலும் ஒருசில சமயங்களில் ஆணவத்தில் ஆடி தன் பெயரை கெடுத்துக்கொண்டும் நெருங்கிய நண்பர்கள் உட்பட பலரை பகைத்துக்கொண்டிருக்கும் இருந்திருக்கிறார்.

அதில் முக்கியமாக இருப்பவர் இளையராஜாவின் தம்பி இசையமைப்பாளர் கங்கை அமரன். பல வருடங்களுக்கு முன் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் இளையராஜா, கங்கை அமரனை விரட்டி விட்டிருக்கிறார். அதிலிருந்து இருவரும் சந்திக்காமல் இருந்துள்ளனர்.

 

அதுவும் கங்கை அமரன் மனைவி மறைவுக்கு கூட வராமல் ஆணவத்தின் உச்சியில் இருந்திருக்கிறார் இளையராஜா. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஒரு பிரபலம் தான். பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்தாலும், தன்னைவிட வேறு யாரும் இசையை பற்றி அறியாதவர்கள் என்ற தலைக்கனம் இசைஞானிக்கு இருந்தது தான்.

அதாவது பிரபல பாடகர் மலேசிய வாசுதேவன் ஒரு படத்தை தான் இயக்கி நடித்தும் இருந்திருக்கிறார். அப்படத்தில் இசைஞானியை இசையமைக்க கேட்டால் நிறைய செலவு ஆகும்.

ஏனென்றால் அப்போது முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க பல மடங்கு சம்பளம் வாங்கி வந்ததால், இப்படத்திற்கும் அதிக சம்பளம் கேட்பார் என்று நினைத்திருக்கிறார் மலேசிய வாசுதேவன்.

 

அதனால், அவரது தம்பி கங்கை அமரனை வலுக்கட்டாயமாக இசையமைக்க கேட்டிருக்கிறார் மலேசிய வாசுதேவன். ஒருவழியாக இசையமைக்க ஒப்புக்கொண்ட கங்கை அமரனை பற்றி செய்திதாளில் செய்திகள் வெளியானது.

இதனை அறிந்த இசைஞானி என்னைவிட இசையை பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கூறி கடுமையாக திட்டி என் மூஞ்சில் முழிக்காதே என்று விரட்டிவிட்டிருக்கிறார்.

அதன்பின் சமாதானம் ஆகாத இளையராஜாவை அவரது குரு ஜிகே வெங்கடேஷ், வேறு ஒருவர் இசைமையப்பதற்கு உன் தம்பியே பண்ணட்டுமே என்று கூறியப்பின் தான் சமாதானம் ஆகியிருக்கிறார் இளையராஜா. இதேபோல் தன் இசையை கச்சேரிகளில் பாடுவதிலும் அண்ணன் தம்பிக்கு இடையில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது என்பது வேறொரு தகவல்.