ஐ.பி.எல் தொடரில் பாகிஸ்தான் நடுவர்கள், பயிற்சியாளர்கள் மட்டும் வேண்டும் வீரர்கள் வேண்டாமா : அஜ்மல் காட்டம்!!

455

Ajmal

ஐ.பி.எல் தொடரில் பாகிஸ்தான் பயிற்சியாளர் இருக்கும் போது வீரர்களை மட்டும் சேர்க்காதது ஏன் என்று பாகிஸ்தான் வீரர் அஜ்மல் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பை தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு எந்த போட்டியும் நடத்தப்படாமல் உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் சிறந்த லீக் போட்டியான ஐ.பி.எல் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர்களை சேர்க்கும் படி அப்ரிடி, வசிம் என பல பாகிஸ்தான் வீரர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அஜ்மல் கூறுகையில், பாகிஸ்தான் பயிற்சியாளர்கள் ஐ.பி.எல் போட்டிகளில் இருக்கும் போது வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன். பாகிஸ்தான் வீரர்களுக்கும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்க பி.சி.சி.ஐ முன்வர வேண்டும்.

மேலும் உலகிலேயே மிகச் சிறந்த T20 தொடர் ஐபிஎல் என்று பி.சி.சி.ஐ கூறுமானால் பாகிஸ்தான் வீரர்களையும் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.