வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் அன்னை பூபதியின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!!

606

அன்னை பூபதியின் நினைவுதினம்..

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் நேற்று (19.4.2023) அன்னை பூபதியின் 35வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.



காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டுவரும் வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு முன்பாக உள்ள பந்தலில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது அன்னை பூபதியின் திருவுருவ படத்திற்கு தீபம் ஏற்றி மலர் அஞ்சலி நிகழ்த்தபட்டது.