ஜப்பானில் முட்டை வீச்சு தாக்குதல் நடத்திய இலங்கையர் உட்பட மூவர் பேர் கைது!!

757

Egg

ஜப்பானில் வெளிநாட்டு மாணவர்கள் மீது முட்டை மற்றும் கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 மற்றும் 19 வயதான இந்த இளைஞர்கள் இலங்கை, வியட்நாம் மற்றும் நேபாளம் நாடுகளை சேர்ந்தவர்கள் என டோசு சாகா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இளைஞர்கள் பல முறை காரில் இருந்தவாறு வெளிநாட்டு மாணவர்கள் மீது முட்டைகளை வீசியுள்ளனர்.

மே 20 ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும் மூன்றாவது நபர் தனக்கு சம்பவம் பற்றி எதுவும் தெரியாது என பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் இவ்வாறு வெளிநாட்டு மாணவர்கள் மீது முட்டை வீச்சு தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 19 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்களுடன் மேற்படி மூன்று இளைஞர்களுக்கு தொடர்புள்ளதா என்பது பற்றி அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த அனைத்து மாணவர்களும் டோசுவில் உள்ள மொழியியல் நிறுவகத்தில் ஜப்பானிய மொழியை பயின்று வருகின்றனர்.