வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1500 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்கள் அழிவு : விவசாயிகள் கவலை!!

1094

வவுனியா வடக்கில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக 1500 இற்கு மேற்பட்ட பப்பாசி மரங்களும், பயன்தரு ஏனைய மரங்களும் அழிவடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கடும் வெப்பதற்கு மத்தியில் வவுனியா வடக்கில் நேற்று மாலை (20.04) திடீரென கடும் காற்றுடன் மழை பெய்துள்ளது.

இதன்போது, வவுனியா வடக்கு ஓடைவெளி கிராமத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் காய்த்து அறுவடைக்கு சில வாரங்களே இருந்த 1500 பப்பாசி மரங்கள் காற்றில் முறிந்து விழுந்து அழிவடைந்துள்ளது.



அத்துடன், ஒலுமடு கிராம அலுவலர் பிரிவில் உள்ள விவசாயிகள் பலரின் வாழ்வாதாரமாக இருந்த பப்பாசி, வாழை, புகையிலை, கத்தரி உள்ளிட்ட பயன்தரு மரங்களும் காற்றில் முறிந்து அழிவடைந்துள்ளன. தமது வாழ்வாதரமாக மேற்கொண்ட பயிர்கள் அழிவடைந்தமை காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.