3 மாத கர்ப்பிணிப் பெண் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சிக் காரணம்!!

1580

பழனியில்..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவருடைய மனைவி பெனாசீர் சித்திகா (வயது 24). திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் நேற்று இரவு திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.



காவல் துறையினர் உடலை கைப்பற்றி பழனி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். இது குறித்து தற்கொலை செய்து கொண்ட பெணாசீர் சித்திக்காவின் தாயார் அரக்காஸ் அம்மாள் கூறுகையில், எனது மகளுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன.

மூன்று வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. நேற்று காலை எனது மகளை சந்தித்தபோது மூன்று மாதம் கர்ப்பிணியாக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் சாகுல் அமீது அடிக்கடி பணம் கேட்டு மாமனார்,

மாமியார் தொந்தரவு செய்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தான் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், மாமனாருக்கு அடிக்கடி கால் வலி ஏற்படுவதால் தனது மகளை கால்களை அழுத்தி விடசொல்லி தொந்தரவு செய்வதாகவும், அடிக்கடி என் மகள் கூறிவந்தார்.

இந்நிலையில் மருமகனின் உறவினரான பரிதா என்பவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சில விஷயங்கள் பேசுவதாக கூறி சாகுல் அமீதை தனியாக அழைத்து சென்று பேசுவதும், இதனால் எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் எனது மகனை பார்த்துக் கொள்ளுமாறு கூறிக்கொண்டே வந்தார்.

இந்நிலையில் எனது மகள் நேற்று இரவு தீயிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்கள். என் மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும்,

மாமனார், மாமியார், மருமகன் மூன்று பேரையும் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவர் தெரிவித்தார். பழனியில் மூன்று மாத கர்ப்பிணி பெண் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.