சிலாபத்தில் இளம் மனைவியை கடத்திச் சென்ற கணவன் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹலவத்த பகுதியில் கணவனுடன் முரண்பட்டுக் கொண்டு தாயின் வீட்டுக்கு சென்ற 18 வயதான இளம் மனைவி 19 வயது கணவனால் கடத்தப்பட்டுள்ளார்.
குறித்த கடத்தல் சம்பவம் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுடன், குறித்த மனைவியின் கணவர் உட்பட ஐவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவியை கடத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணவன் | Husband Kidnaped Wife Couple Love Story
கடத்தப்பட்ட பெண் ஹலவத்த பிரதேசத்தில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் கல்வி கற்றபோது, இளைஞன் ஒருவருடன் காதல் உறவு கொண்டிருந்தார்.
பின்னர் அந்த இளைஞனுடன் இரகசியமாக சென்று திருமணம் செய்து கொண்டு பல மாதங்கள் அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். எனினும் இளவயதான தம்பதியருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவர் தனது தாயின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
வீட்டில் வந்து தங்கியிருந்த மனைவியை, அவரது கணவர் மற்றும் சிலர் வந்து கடத்திச் சென்றுள்ளனர். இதன் போது இளம் மனைவியின் தாய் மட்டுமே இருந்தமை தெரியவந்துள்ளது.
தாயை தாக்கிவிட்டு திருமணமான பெண் கடத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றர்.