பெற்ற மகனை வீதியில் விட்டுவிட்டு புதிய கணவருடன் தப்பிச் சென்ற தாய்!!

1086

எம்பிலிபிட்டிய..

தாயினால் வீதியில் கைவிடப்பட்டிருந்த ஐந்து வயது சிறுவன் ஒருவனை எம்பிலிபிட்டிய – குட்டிகல பொலிஸார் மீட்டுள்ளனர். குட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.



குறித்த சிறுவனை முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்று அவரது தாய் மற்றும் மாற்றாந்தந்தை ஆகியோர் நெடுஞ்சாலையில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை சிறுவனின் தாய், தனது கணவனை விட்டு பிரிந்து மறுமணம் செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் தாய் அந்த சிறுவனை அடித்து காயப்படுத்தியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் குறித்த சிறுவன் சிகிச்சைக்காக எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,சட்ட வைத்தியரிடமும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.