24 விரல்களோடு பிறந்த அதிசய குழந்தை.. பூரிப்புடன் கண்டு களிக்கும் மக்கள்!!

1308


தெலங்கானாவில்..தெலங்கானா மாநிலம், நிஜாமாபாத் பகுதியை அடுத்துள்ளது யர்ஜட்லா என்ற கிராமம். இங்கு வசித்து வரும் சுங்கர்பு சாகர் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராவளி என்ற இளம்பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமானது. இவர்களுக்கு திருமணம் முடிந்து அண்மையில் ராவளி கற்பமுற்றிருந்தார்.இந்த சூழலில் ராவளிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்னர் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவரை கொரட்லா பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கு 24 விரல்கள் இருந்துள்ளது.
இதனால் மருத்துவர்கள், பெற்றோர்கள், அங்கிருந்தவர்கள் இந்த குழந்தையை அதிசயமாக பார்க்கின்றனர். ஏனெனில் பொதுவாக கைகளில் 5+5 என 10 விரல்களும், கால்களில் 5+5 என 10 விரல்களும் தான் இருக்கும்.


ஆனால் இந்த குழந்தைக்கு கைகளில் 6+6 என 12 விரல்களும், கால்களில் 6+6 என 12 விரல்களும் உள்ளன. எனவே இந்த குழந்தையை அனைவரும் அதிசயமாக கண்டு செல்கின்றனர்.

இந்த குழந்தையின் பெற்றோர், தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தங்கள் மகனை தெரியாதவர்கள் கூட வாழ்த்துவதாகவும், தங்கள் மகனை கடவுள் கொடுத்த வரமாக கருதி, அவனை இளவரசன் போல் வளர்ப்போம் எனவும் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிது என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தாலும் கூட, ஏற்கனவே பலமுறை இதுபோன்று நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இரட்டை உடலுடன், தலையுடன், கால்களுடன் என அதிசய குழந்தைகள் பிறந்த செய்திகள் ஏற்கனவே வெளியாகி வருகிறது. இதுபோல் இருப்பது சில நேரங்களில் ஊட்டச்சத்து குறைபாடு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே கர்ப்பமாக இருக்கும் பெண்கள் நல்ல ஆரோக்கியமான சாப்பாட்டை சாப்பிட்டு, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும், நேரத்துக்கு சாப்பிட வேண்டும் என்றும், அவரை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.