இலங்கையில் உயிரிழந்த தாய்க்கு மகன் செய்த மோசமான செயல்.!!

2237

அனுராதபுரத்தில்..

அனுராதபுரத்தில் தனது வீட்டின் வீதி வழியாக தாயின் சடலத்தை கொண்டு செல்ல அனுமதி வழங்காத மகன் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

அண்மையில் ஹொரவபொத்தான பிரதேசத்தில் 83 வயதான தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் மகளின் வீட்டிற்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.

அதற்கமைய, அனைவரும் தயாரான போதிலும் உயிரிழந்த தாயின் மகள் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் மகனின் வீட்டை கடந்தே செல்ல வேண்டும்.

இந்த நிலையில் தனது வீட்டை கடந்து சடலத்தை கொண்டு செல்வதற்கு அனுமதிக்காமல் மகன் ஒருவர் தனது தாயின் உடலை நிராகரித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

வீதியிலேயே சடலத்தை வைக்க வேண்டிய நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.