பலரையும் சோகத்தில் ஆழ்த்திய இளம் தந்தையின் மரணம் : விசாரணையில் வெளியான தகவல்!!

1758

மத்துகமவில்..

மத்துகம – குருதிப்பிட்ட பிரதேசத்தில் இளம் தந்தையொருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களால் கொடூரமான முறையில் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.



கடந்த பெப்ரவரி 14 அன்று, கல்மட்ட, வெலிப்பன்ன வீதியில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச்சென்ற மூன்று பாடசாலைச் மாணவர்களை எச்சரித்த 34 வயதுடைய இளம் தந்தையொருவர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தால் அடித்துக் கொல்லப்பட்டார்.

சம்பவத்தில் ஒரு பிள்ளையின் தந்தையான ரங்கவிராஜ் துரதிஷ்டவசமாக உயிரிழந்திருந்தார்.இதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மத்துகம நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் ரங்காவை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் மூவர் மாகொல சிறுவர் தடுப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் 16 வயதுடைய பாடசாலை மாணவர்களான சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டு சிறுவர் தடுப்பு நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பின்னர் சந்தேகநபர்களான மூன்று மாணவர்களையும் வானில் மீண்டும் தடுப்பு நிலையத்திற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர்களின் உறவினர்கள், நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் வானை நிறுத்தி சில பொருட்களை வழங்கியதாக கொலை செய்யப்பட்ட நபரின் உறவினர்களால் சிறைச்சாலை புலனாய்வுப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை உயிரிழந்தவரின் சகோதரர் ஒருவர் கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்து சிறைச்சாலை அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில், இது தொடர்பில் உயிரிழந்த ரங்காவின் மூத்த சகோதரர் தெரிவிக்கையில்,

சந்தேகநபர்களின் உறவினர்கள், நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் வானை நிறுத்தி சில பொருட்களை வழங்கியதினை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வந்தோம். சம்பவத்தை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்தோம். சந்தேகநபர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், எதிர் தரப்பினரான, எங்கள் மீது பலி விழும்.

எனவே இதனை அடுத்த வழக்கில், வழக்கறிஞர் மூலம், நீதிமன்றத்தில் தெரிவிக்க, சிறைத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர். அடுத்த வழக்கில் இந்த சம்பவத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க எண்ணியுள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.