பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம், சிங்கள மயமாக்கலை எதிர்த்து வடக்கு, கிழக்கில் இன்று செவ்வாய்க்கிழமை (25.04.2023) பூரண ஹர்த்தால் இடம் பெறுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் , சிங்கள மக்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அந்தப் பகுதிகளில் அனைத்து துறைகளும் இன்று முடங்கியுள்ளன.
வவுனியாவில் தமிழ், முஸ்லிம் , சிங்கள மக்களின் வர்த்தக நிலையங்கள், சந்தைகள், அழகக நிலையங்கள் பூட்டப்பட்டு காணப்படுகின்றன.
பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகைதரவில்லை. இதனால் பாடசாலைகள் இயங்கவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து காணப்படுகின்றது.
தனியார் பேரூந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை மேலும் அரச திணைக்களங்கள் , அரச பேரூந்துகள் வழமை போன்று இயங்குகின்றன.