அம்பலாங்கொடயில்..
மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் குழந்தையுடன் பயணித்த தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அம்பலாங்கொட நகர் காலி வீதியில் இன்று (25) காலையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பலாங்கொட ஊரவத்த பிரதேசத்தில் வசிக்கும் அம்பலாங்கொடை மாநகர சபையின் ஊழியரான லகீஷா யசஸ்வி என்ற 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை மாநகர சபையில் வருவாய் நிர்வாகியாக கடமையாற்றுவதுடன் தனது குழந்தையை முன்பள்ளிக்கு விடுவதற்காக அம்பலாங்கொட உரவத்தையில் உள்ள தனது வீட்டிலிருந்து கொழும்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.