வவுனியா : வன்னி ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு!!

726

Mediaவன்னி ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு வவுனியா குடியிருப்பு விருந்தினர் விடுதியில் நேற்று (29.04) வியாழன் மாலை இடம்பெற்றது.

சங்கத்தின் தலைவர் சனத் பிரியந்த தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தலைவர் உரையாற்றுகையில்..

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களை உள்ளடக்கி இயங்கி வரும் வன்னி ஊடகவியலாளர் அமைப்பு எதிர்காலத்தில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது.
எனமது அமைப்பில் இருந்து இயற்கை எய்திய சிரேஸ்ட ஊடகவியலாளர் த. விவேகராசா அவர்களின் இழப்பு என்பது எமது பிராந்தியத்திற்கு பெரும் துர்ப்பாக்கியமாகும்.

இதேவேளை எமது சங்கம் வவுனியா ஊடகவியலாளர்களுக்கு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. இனி வரும் காலங்களில் அதனுடைய பணி ஊடகவியலாளர்களின் நலன் சார்ந்ததாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என தெரிவித்தார்.

இத்துடன் இக் கூட்டத்தின் போது வன்னி ஊடகவியலாளர் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாகவும் ஊடகவியலாளர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பன தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

இதன் பிரகாரம் வன்னி ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவராக உபாலி பந்துல செனவிரத்ன, உபதலைவராக நவரத்தினம் கபிலநாத், செயலாளராக கிருஸ்ணகோபால் வசந்தரூபன், உப செயலாளராக டபிள்யு. வினோத், பொருளாளராக பண்டார விபுலசேன, நிர்வாக குழு உறுப்பினர்களாக எஸ். நிசாந்த, ரொமேஸ் மதுசங்க, நிசங்க மாதவகுலசூரிய, சி. கஜேந்திரகுமார், ப. ரோன் கனிசியஸ், எஸ். தயாளன் ஆகியோரும் ஆலோசகர்களாக சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் பி. மாணிக்கவாசகம், தினசேன ரத்துகமகே; ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.