வவுனியாவில் கால்நடைகளின் சாலைகளில் பிரவேசிப்பதால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்!!

711

வவுனியா கல்மடு வீதியில் கால்நடை மந்தைகள் கடந்த ஒரிரு வாரங்களாக முற்பகல் வேளைகளில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

புதுக்குளம், தேவர்குளம், தரணிக்குளம், ஈச்சங்குளம், கல்மடு ஆகிய பகுதிகளில் விவசாயத்துடன் மந்தை வளர்ப்பு மக்களின் வாழ்க்கையோடு பிண்ணிப்பிணைந்து காணப்படுகின்றது.
மேற்குறிப்பிடப்பட்ட கிராமங்களில் சிறுபோக வேளாண்மை செய்வதற்காக மந்தைகளில் மேய்ப்பு தறைகளான வயல் நிலங்கள் வேலிகள் அடைக்கப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக கால்நடைகள் தமது உணவு தேவையை பூர்த்திசெய்வதற்காக வவுனியா கல்மடு பிரதான வீதிளின் இருமருங்கிலும் வளர்ந்து காணப்பட்ட புற்களையே மேய்ந்து தமது பசியை பேக்கிவந்தன இருப்பினும் தற்போது கோடைகாலம் ஆரம்பித்துவிட்டமையால் கால்நடைகளுக்கான போதிய உணவு கிடைக்கப்பெறாமையால் கால்நடைகள் வீதிகளில் ஆங்காங்கே அலைமோதித்திரிகின்றன.

இவ்வாறு வீதிகளில் கால்நடைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் வீதிவிபத்துக்கள் ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்படுகின்றது.

அன்றாடம் பல்வோறு கடமைகளின் நிமிர்த்தம் வவுனியா நகர்ப்புறங்களை நோக்கி செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்தின் மத்தியிலேயே போக்குவரத்தை மேற்கொள்ளவேண்டிய அசாதாரண சூழ்நிலை காணப்படுகின்றது.

-நன்றி தமிழ்24நியூஸ்-

1 2 3 4