கடந்த வாரம் மட்டும் யாழில் 38 இலட்சம் பெறுமதியான பொருட்கள் கொள்ளை!!

607

Kollai

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரம் 38 இலட்சம் ரூபாய் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிசார் இதனைக் கூறியுள்ளனர்.

கடந்த வாரம் யாழ். மற்றும் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களில் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்டமை, கோவில் மற்றும் வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுத்தமை தொடர்பாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டினர்.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற 12 முறைப்பாடுகளிலும் 37 இலட்சத்து 75 ஆயிரத்து 350 ரூபாய் பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கொள்ளை தொடர்பாக மூவரும், பாரிய குற்றம் தொடர்பாக 7 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 38 பேரும் உட்பட 179 பேர் யாழ் மற்றும் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.