விமான கடத்தலின்போது பயணிகளை காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த பெண் : திரைப்படமான கதை!!

437

நீர்ஜா..

தீவிரவாதிகள் விமானம் ஒன்றைக் கடத்தியபோது, துணிந்து நின்று பயணிகளைக் காப்பாற்றுவதற்காக உயிர்நீத்த இந்தியப் பெண்ணின் கதை இது. Neerja என்றொரு இந்தித் திரைப்படம் குறித்து எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது? அந்த திரைப்படம் உண்மை சம்பவம் ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்.

நீர்ஜா (Neerja Bhanot)க்கு 23ஆவது பிறந்தநாள் வருவதற்கு இரண்டு நாட்கள்தான் இருந்தன. Pan Am Flight 73 என்ற விமானத்தில் பணிப்பெண்ணாக பணியாற்றிவந்தார் நீர்ஜா.

1986ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, அன்று பாம்பே என்று அழைக்கப்பட்ட மும்பையிலிருந்து, பாகிஸ்தானின் கராச்சி வழியாக அமெரிக்கா செல்லும் அந்த விமானத்தில் நீர்ஜா பணிப்பெண்ணாக பணியிலிருந்தபோது, கராச்சியில் இறங்கிய விமானத்திற்குள் 5 தீவிரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்தார்கள்.

அவர்களுடைய குறி அமெரிக்கர்கள். ஆகவே, தங்கள் நோக்கத்தை வெளிப்படுத்துவதற்காக, இந்திய அமெரிக்கரான ராஜேஷ் குமார் (29) என்பவரை சுட்டுக்கொன்றார்கள் தீவிரவாதிகள்.

விமானத்துக்குள் தீவிரவாதிகள் நுழைந்துவிட்டார்கள் என்பதை இரகசியமாக விமானிகளுக்குத் தெரிவித்து, விமானம் புறப்படாமல் தடுத்துவிட்டார் நீர்ஜா. விமானிகள் தப்பியோடிவிட்டார்கள்.

விமானத்துக்குள் இருந்த அமெரிக்கர்களின் பாஸ்போர்ட்களை சேகரிக்குமாறு தீவிரவாதிகள் உத்தரவிட நீர்ஜாவும், Sunshine Vesuwala என்னும் பணிப்பெண்ணும், அமெரிக்கர்களின் பாஸ்போர்ட்களை ஒளித்துவைத்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தபோது 17 மணி நேரம் நீடித்த அந்த கடத்தல் நாடகம் முடிவுக்கு வந்தபோது, 22 பேர் கொல்லப்பட்டிருந்தார்கள், 120 பேர் வரை காயமடைந்திருந்தார்கள்.

நடந்தது என்னவென்றால், விமானிகள் தப்பியோடியிருக்க, விமானத்தில் விளக்குகள் பேட்டரியின் திறன் போதாமல் அணைய, தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக சுடத்துவங்கியுள்ளார்கள்.

அப்போது, நீர்ஜாவும் Sunshineம் பயணிகளை வெளியேற்றுவதில் கவனம் செலுத்தியுள்ளார்கள். ஆகவே, நீர்ஜாவை தீவிரவாதி ஒருவன் சுட்டுவிட்டான். சற்று நேரத்தில் அவர் உயிரிழந்துவிட்டார்.

ஆனாலும், ஏராளமானோரை காப்பாற்றியபின்னரே உயிரிழந்துள்ளார் நீர்ஜா. தப்பிக்க வாய்ப்பிருந்தும் பயணிகளைக் காப்பாற்ற உயிரை தியகாம் செய்த நீர்ஜாவுக்கு இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகள் பல விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளன.

எல்லாவற்றிற்கும் மேல், நீர்ஜாவால் காப்பாற்றப்பட்ட ஏழு வயது சிறுவன் ஒருவன், அவர் கொல்லப்பட்டதைப் பார்த்த அந்த குழந்தை, வளர்ந்து இப்போது பிரபல விமான நிறுவனம் ஒன்றில் விமானி ஆகியுள்ளார். நீர்ஜாவால்தான் தான் இப்போது உயிர் வாழ்வதாக தெரிவிக்கிறார் அந்த விமானி.