ரன்டெம்பே மாணவர் படை பயிற்சி மத்திய நிலையத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவனை வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாய் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இராணுவ சிப்பாய் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாணவர் படை பயிற்சி மத்திய நிலையத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கூமா ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடு ஒன்றை அடுத்து இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ சிப்பாய் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 21 வருட சிறை தண்டனை அவருக்கு விதிக்கப்படும் என மேஜர் ஜெனரல் கூமா ஹேரத் தெரிவித்துள்ளார்.




