அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்திய நரேந்திர மோடி!!

551

MOdi

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தனக்கு ஒதுக்கப்பட்ட பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் இன்று தனியாக குடியேறியுள்ளார்.

டெல்லியில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் 5 பங்களாக்களை கொண்ட பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் நரேந்திர மோடி தனி நபராக குடியேறும் முதல் பிரதமர் ஆகிறார்.

இந்நிலையில் இதுவரை இங்கு குடியேறிய 14 பிரதமர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் தான் குடியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வீட்டுக்கு வெள்ளையடிக்கும் பணியைத் தவிர வேறு எந்த மாற்றத்தையும் செய்ய அறிவுறுத்தாமல், பிரதமர் இல்லத்தில் மோடி குடியேறியிருப்பது அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.