நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணியில் கம்பீர் : மகிழ்ச்சி வெள்ளத்தில் கங்குலி!!

467

Gambir

நீண்ட இடைவெளிக்கு பின் இந்திய அணியில் காம்பீருக்கு இடம் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் இந்திய அணி வரும் யூலை மாதம் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு அணிக்கெதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த அணியில் நீண்ட இடைவெளிக்கு பின் தொடக்க ஆட்டக்காரரான கௌதம் கம்பீர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சவுரவ் கங்குலி கூறியபோது, கடந்த டிசம்பர் 2012 முதல் இந்திய அணிக்காக விளையாட தெரிவு செய்யப்படாமல் விலக்கி வைக்கப்பட்ட கம்பீருக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும் தேர்வாளர்களின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது எனவும் கூறியுள்ளார்.

இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 4021 ஓட்டங்களை குவித்துள்ள கம்பீர் 9 சத்தங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.