பிரித்தானியாவில் நபர் ஒருவர் சுயநினைவை இழந்து விட்ட நிலையிலும், காதலியிடம் நான் உன்னை காதலிப்பதாக கூறியுள்ளார்.
பிரித்தானியாவின், பெர்பீல்ட் நகரில் வசித்து வந்த ஸ்டிவர்ட் (39) என்பவருக்கு கடந்த 2009ம் ஆண்டு ஏற்பட்ட கார் விபத்தில் தலை, விலா எழும்புகள், முதுகு எழும்பு மற்றும் நுரையீரல் ஆகியவை பாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டார். மேலும் இவரது குடும்பத்தினர் மற்றும் காதலி இவர் பிழைக்க மாட்டார் என்று நினைத்தனர்.
தற்போது, இவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, அந்த நபர் தனது காதலியிடம் ஒரு வார்த்தையை கூறியுள்ளார். “எனக்கு நீ யாரென்று தெரியவில்லை ஆனால் நான் உன்னை காதலிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதனால் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்ற இவரின் காதலியான கிரிஸி, ஸ்டிவர்டை திருமணம் செய்துள்ளார்.





