பிரிந்து சென்ற மனைவியை வீடு தேடிச் சென்று வெட்டிக் கொன்ற கணவன்!!

325


மதுரையில்..மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி குன்னத்தூர் பகுதியில் சங்கரம்மாள் என்ற அபிராமி(28) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த பிரபுராஜா(32) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.தனியார் மில் ஒன்றில் பிரபு ராஜா வேலை செய்து வருகிறார். இந்தத் தம்பதியினருக்கு 9 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.அபிராமி இந்த நிலையில், வீட்டில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அதாவது, பிரபு ராஜா சமீபகாலமாகத் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்தார். நாள்தோறும் இந்த தகராறு நீடித்ததால் பிரபு ராஜாவோடு இனி வாழமுடியாது என முடிவெடுத்த அபிராமி, தன் இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் உள்ள தன் பாட்டி ஊருக்கு சென்றுவிட்டார்.


அங்கு தனியே வீடு எடுத்து குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தனது மனைவியைப் பார்க்க பிரபுராஜா மதுரையில் இருந்து சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருவரும் பேசிக்கொள்ளும்போது மீண்டும் தம்பதிகளுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில், ஆத்திரமான பிரபுராஜா தன் மனைவி அபிராமியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபு ராஜாவைத் தேடி வருகின்றனர். பிரிந்து சென்ற மனைவியை அவரது கணவர் தேடிவந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.