விடிகாலையில் நடுங்கவைத்த சம்பவம்… தீ விபத்தில் சிக்கிய நிலையில் தாயார் மற்றும் இரு மகள்கள்..!!

515


அமெரிக்காவில்..



அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கிய நிலையில், அதில் பரிதாபமாக பலியான தாயார் மற்றும் அவரது இரு பிள்ளைகளின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.



நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வெள்ளிக்கிழமை விடிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 48 வயதான டேனியல் ஹேவன்ஸ், மற்றும் அவரது மகள்கள் ஜர்னி மைல்ஸ்(11), மற்றும் கெஸ்லீ மைல்ஸ்(9) ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.




நியூயார்க் நகர தீயணைப்பு மற்றும் மீட்பு அதிகாரிகள் குழு கடுமையாக போராடி, தீ விபத்தில் சிக்கிய குடியிருப்பில் இருந்து இவர்கள் மூவரையும் மீட்டிருந்தாலும், உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றே கூறப்படுகிறது.


சம்பவத்தன்று விடிகாலை சுமார் 5 மணியளவில் தீயணைப்பு துறைக்கு தீ விபத்து குறித்து தகவல் சென்றுள்ளது. நான்கு மாடி குடியிருப்பு கட்டிடமானது தீ விபத்தில் சிக்கியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது மாடியில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து, சமையலறையில் இருந்து ஏற்பட்டிருக்கலாம் என்றே அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், சம்பவத்தின் போது அந்த குடியிருப்பில் புகை எச்சரிக்கை மணி செயல்படவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.


தீ விபத்தையடுத்து, சம்பவப்பகுதிக்கு குடும்பத்தினர் அனைவரும் கண்ணீருடன் ஒன்று திரண்டிருந்தனர். மொத்த குடும்பமும் தீயில் சிக்கி பலியானதை தாங்க முடியவில்லை என உறவினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தமது பேரப்பிள்ளைகள் இருவரும் தீ விபத்து காரணமாக பலியாதை அறிந்து, அவர்களது தாத்தா சுயநினைவின்றி சுருண்டு விழுந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

தகவல் அறிந்து 3 நிமிடங்களில் சம்பவயிடத்திற்கு வந்ததாகவும், ஆனால் தீ கொழுந்துவிட்டெரிந்ததால், குடியிருப்புக்குள் செல்வது கடினமாகவும், தீயை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, ஒருவழியாக குடியிருப்புக்குள் நுழைந்து விபத்தில் சிக்கிய மூவரையும் மீட்டு வந்த பின்னர், முதலுதவி அளித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அவர்கள் உயிர் பிழைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மூவரும் தீக்காயங்களுடன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததுடன், புகையை சுவாசித்துள்ளனர் எனவும், தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டு வரும்போது அவர்கள் சுவாசம் நின்று போயிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.