சிகிச்சை பெற்று வந்த இளைஞர் கொலை.. தம்பதியினர் கைது!!

975


அனுராதபுரத்தில்..அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.சம்பவத்தில் மன்னார் பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் மாதவச்சி பிரதேசத்தைச் 27 வயதுடைய நபரொருவரும், 23 வயதான அவரது மனைவியும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தாக்குதல் தொடர்பாக மேலும் மூவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோதலொன்றின்போது பலத்த காயமடைந்து அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேற்படி இளைஞர் கடந்த 28ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.