பாலியல் தொழிலாளர்களுடன் கணவருக்கு தொடர்பு : பிரபல கிரிகெட் வீரரின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு!!

633

முகமட் சமி..

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமட் சமி பல பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பிலிருந்தார் என்றும் அவர் ஒரு பிளேபோய் எனவும் முகமது ஷமியின் மனைவி ஹாசின் தெரிவித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. முகமது ஷமிக்கு ஹாசின் ஜஹான் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் இடையே வேறுபாடு நிலவி வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முகமது ஷமி மீது ஹாசின் ஜஹான் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகிறார். ஷமி வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாக காவல்நிலையத்தில் பாலியல் மற்றும் குடும்ப துஷ்பிரேயாக பிரிவுகளில் புகார் அளித்தார்.

எனினும் மனைவியின் புகார்களுக்கு முகமது ஷமி மறுப்பு தெரிவித்தார். 2018 ஆம் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஷமியின் மனைவி ஹாசின் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது மனுவில், கடந்த 4 ஆண்டுகளாக ஷமி மீதான கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளார். கிரிக்கெட் விளையாட சக அணி வீரர்களுடன் பயணம் மேற்கொள்ளும் போது கூட பாலியல் உறவுகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டார் என ஹாசின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, முந்தைய வழக்கில் தன்னை பிரிந்திருக்கும் கணவர் ஷமி ஜீவனாம்சம் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து , கொல்கத்தா நீதிமன்றம் முகமது ஷமி, பிரிந்த மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது. எனினும் இந்த ஜீவனாம்சம் தொகை தனக்கு திருப்திகரமாக இல்லை என ஹாசின் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாராம்.