
இங்கிலாந்து எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஏழு ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. லண்டன் லோட்ஸ் மைதானத்தில் சற்று முன் நிறைவடைந்த இந்தப் போட்டியில், நாணயசுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி துடுப்புடன் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலகரத்ன டில்ஷான் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டத்தால் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்த அந்த அணி 300 ஓட்டங்களை விளாசியது.
இலங்கை சார்பில் சங்கக்கார 112 ஓட்டங்களையும் டில்ஷான் 71 ஒட்டங்களையும் குவித்தனர்.
இதன்படி 301 என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 293 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் சிறப்பாக ஆடிய ஜோஸ் பட்லர் 121 ஓட்டங்களை விளாசினார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை ஒரு இருபதுக்கு 20, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதன்படி முன்னதாக இடம்பெற்ற 20க்கு இருபது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அத்துடன் இதுவரை இடம்பெற்ற நான்கு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்று 2-2 என சமநிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





