வவுனியாவில் வெசாக் தினத்தை முன்னிட்டு 1000 பேருக்கு உணவு வழங்கிய பொலிசார்!!

718


வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிசாரால் 1000 பேருக்கு உணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது. வெசாக் தினமானது இன்றும் நாளையும் நாடு பூராகவும் பௌத்தர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.



அதன் அடிப்படையில் வெசாக் தினத்தில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தால் சமுதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் காத்தார் சின்னக்குளம் சிவில் பாதுகாப்பு அமைப்பு ஊடாக ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.





ஏ9 வீதியால் பயணித்த பலரும் தமது வாகனங்களை நிறுத்தி உணவினைப் பெற்றுச் சென்றனர். வவுனியா தலைமை பொலிசிஸ் நிலையம் முன்பாக பௌத்த, இந்து மத குருமார்களின் ஆசிர்வாதத்துடன், இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இதில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சமுதாய பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, காத்தார் சின்னக்குளம் கிராம அலுவலர், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள், காத்தார் சின்னக்குளம் சமுதாய பொலிஸ் குழுவினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.