தவளை…
இந்தக் காலம் சம்மர் காலம் என்பதால் அடிக்கிற வெயிலைத் தணிப்பதற்கு பலரும் பல வழிகளை யோசித்து வந்தால் இந்தியாவில் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் இரு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
அடிக்கிற வெயிலை சமாளிக்க முடியாத மக்கள் தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு, ஒடிசா, வங்காளம், அசாம் மாநிலங்களில் பாரம்பரிய முறைப்படி ஒரு மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கு நடக்கும் திருமணம் போல மேள தாளத்துடன் இத்திருமணம் நடைபெற்றுள்ளது.
நாடியாவில் உள்ள சாந்திபூர் ஹரிபூர் பஞ்சாயத்தின் சர்தார் பாரா பகுதியில் ஒரு பழங்கால வழக்கத்தின் படி தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தவளைகள் திருமண விழாவில் மந்திரங்கள் ஓதி அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என நம்பப்பட்டது. வெயில் இல்லாமல் நீர் நிலைகள் எல்லாம் வற்றிப் போய் விவசாயம் செய்யக் கூட தண்ணீர் இல்லாத நிலையில் மக்கள் பெரும் பாடு படுவதால் ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்த ஊரில் உள்ள காளி கோவிலில் தான் இந்த வெகு விமர்சையாக இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஊர் மக்களின் நம்பிக்கையின் படி தவளைகள் கருவுறுதல் தான் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தவளைகள் தான் உலகத்தில் முதலில் தோன்றியதாகவும் அவை தண்ணீரில் முட்டையிட்டு பிறகு முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்து நிலத்திற்கு வந்து வாழ்க்கையை வாழ்கின்றனர். இதனால் தான் இந்த தவளைகளுக்கு திருமணம் செய்து மழைக்காக வேண்டி இருக்கிறார்கள்.