வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியசாலை பொதுமக்கள் நட்புறவு சங்கம் அங்குரார்ப்பணம்!!

655

VGH

வவுனியா பொது வைத்தியசாலையில் வைத்தியசாலை பொது மக்கள் நட்புறவு சங்கம் நேற்று (31.5) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வைத்திசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு.அகிலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இவ் அங்குரார்ப்ண கூட்டத்தில் வைத்தியசாலையின் அபிவிருத்திகள், வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான தேவைகளை தேவைகளை நிறைவு செய்வதற்கான செயன்முறைகளை கையாளல், உட்கட்டுமான தேவைகளை மேம்படுத்தும் வழிமுறைகள் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது.

இதனையடுத்து புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இதன் தலைவராக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு. அகிலேந்திரனும் உப தலைவராக வைத்தியகலாநிதி வி.சுதர்சினியும், செயலாளராக ரி.கே.இராசலிங்கமும் உப செயலாளராக வைத்தியகலாநிதி வி.சுரேந்திரனும் பொருளாளராக ச.இராசலிங்கமும் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் நிர்வாக சபை உறுப்பினர்களாக ச.ஆனந்தராஜ், கு.சிவகுமாரன், ஏ.சி.எம். ரயிஸ், பி.ஜெகநிதி,கே.ஆதி, ந. கபிலநாத், எஸ்.சந்திரகுமார், டி.ஜி. சரத்குமார, சங்கர் சத்தியவேல், எஸ்.பாலநாதன், வைத்தியகலாநிதி ஜி.சேந்தன், என்.செல்வரட்ணம், எஸ். அன்னலிங்கம், கோ.ஸ்ரீஸ்கந்தராஜா, கா.லியாகத்தலி, வே.சுரேந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.