அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை.. மணமேடையில் அடம்பிடித்து திருமணம் செய்துகொண்ட தங்கை!!

882

பீகாரில்..

அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை மணமேடையில் வைத்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி தங்கை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சப்ரா பகுதியில் முபராக்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ரிங்கு என்ற இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணத்துக்கு வரண் பார்த்து வந்துள்ளனர். அப்போது சரண் என்ற பகுதியில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அப்போது சரண் என்ற பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவரை வரணாக பார்த்துள்ளனர்.

மாப்பிள்ளை மாற்றும் பெண் வீட்டாருக்கு பிடித்து போகவே, ரிங்குவிற்கும் ராஜேஷிற்கும் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். அதன்படி திருமணம் கடந்த 2-ம் தேதி கோலாகலமாக நடைபெற இருந்தது.

மணமகனும் – மணமகளும் மணமேடைக்கு வந்து மாலையை மாற்றிக்கொண்டனர். அந்த சமயத்தில் திடீரென வந்த ரிங்குவின் தங்கையான புதுல், ராஜேஷை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார்.

இதனை கேட்டு இரு வீட்டாரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனர். மேலும் தனக்கு அவரை கட்டாயம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தங்கை அடம்பிடித்துள்ளார்.

அதற்கு பெண் வீட்டாரோ மாலையெல்லாம் மாற்றியாச்சு. எனவே அது முடியாது என்று எவ்வளவோ எடுத்து கூறியும் சமாதானம் செய்து வைக்க முயன்றனர்.ஆனால் தங்கை புதுலோ தனக்கும் ராஜேஷுக்கும் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால், மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து பிரச்னை மேலும் மேலும் அதிகரிக்கவே அக்கா ரிங்கு, ராஜேஷை விட்டு கொடுத்தார். இருப்பினும் இதற்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து இந்த பிரச்னை பூதாகரமான நிலையில், போலீசார் அந்த இடத்துக்கு வந்தனர்.

அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தான் புதுல் படிக்க வெளியூருக்கு சென்ற சமயத்தில் ராஜேஷிடம் பழகியுள்ளார். இருவரும் மணி கணக்காக போனில் உரையாடி பழகி வந்துள்ளனர். தொடர்ந்து இருவருமே காதலித்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனை கேட்டு இருவீட்டாரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மாப்பிள்ளை ராஜேஷ், ரிங்குவிற்கு பதில் அவரது தங்கை புதுலின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். நீண்ட போராட்டங்களுக்கு பிறகு இவர்கள் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.