வெளிநாடுகளில் உள்ள 132 இலங்கையர்களுக்கு சிவப்பு பிடிவிராந்து

545

வெளிநாடுகளில் உள்ள 132 இலங்கையர்…

இலங்கை போதைப்பொருள் கும்பல் தலைவர்கள் 132 பேர் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாகவும், அவர்களுக்கு இன்டர்போல் காவல்துறையினர் சிவப்பு வாரண்ட் பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் உள்ள அகதிகள் என்பதுவும் இவர்களுக்கு டயஸ் போரா பாதுகாப்பு வழங்கி வருவதுவும் தெரியவந்துள்ளது.

மோதர பிரதேசத்தைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பல் தலைவன் உட்பட 47 இலங்கை கடத்தல்காரர்கள் பிரான்சில் இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து 100 மைல் தொலைவில் அவை அமைந்துள்ளது.

சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என சர்வதேச காவல்துறையினர் இலங்கைக்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை,பிரான்ஸில் கைதான அஞ்சுவை அடுத்த வாரத்திற்குள் இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.